மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணியில் இருந்து கேசவ் மகராஜ் விலகியுள்ளார்.

அடுத்த போட்டி வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அந்த போட்டியில் தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் கேசவ் மஹாராஜ் ஆடமாட்டார் எனவும் அவருக்கு பதிலாக இடது கை ஸ்பின்னர் ஜார்ஜ் லிண்டே ஆடுவார் எனவும் தென்னாப்பிரிக்க அணி அறிவித்துள்ளது. புனே டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது ஃபீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் கேசவ் மஹாராஜுக்கு காயம் ஏற்பட்டது.

எனவே மஹாராஜ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜார்ஜ் லிண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்த போட்டி வரும் 19ம் தேதி ராஞ்சியில் தொடங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here