38 வயதாகும் தோனி ஓய்வையும் அறிவிக்காமல், உள்நாட்டு கிரிக்கெட்டிலும் ஆடாமல் தேர்வுக்குழுவினை வெறுப்பேற்றி வந்ததால், அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு கேப்டன் கோலியும், அணி நிர்வாகமும் வந்ததாகத் தெரிகிறது.

“தோனி மீண்டும் இந்திய அணிக்குள் வருவது என்பது அவர் எப்போது ஆடத்தொடங்குகிறார் என்பதைப் பொறுத்தும் வரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் எப்படி ஆடுகிறார் என்பதைப் பொறுத்தும் உள்ளது. மேலும் மற்ற விக்கெட் கீப்பர்களின் பார்ம், தோனியின் பார்முடன் ஒப்பிடும்போது எப்படி உள்ளது என்பதையெல்லாம் அறுதியிட்டுத்தான் முடிவெடுக்க முடியும்

. வரும் ஐபிஎல் தொடர் இந்த விஷயத்தில் மிகப்பெரிய தொடர், உலகக்கோப்பை டி20 அணிக்கான 15 வீரர்களைத் தேர்வு செய்யும் முன்பாக கடைசியாக முடிவெடுக்க வேண்டிய தொடர் ஐபிஎல் தான்” என்றார் ரவிசாஸ்திரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here