இந்த வருட துலீப் கோப்பை தொடருக்கான 3 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியா ரெட், இந்தியா ப்ளூ, இந்தியா கிரீன் ஆகிய மூன்று அணிகளை பிசிசிஐ நேற்று அறிவித்தது. சர்ச்சைக்குரிய சம்பவம் என்னவென்றால் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தடை செய்யப்பட்ட பஞ்சாப் அணி வீரர் அபிஷேக் குப்தா இந்திய ரெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது. இந்த செய்தி பலரது கவனத்தையும் ஈர்த்ததுடன் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஏனென்றால் இந்த வருடத் தொடக்கத்தில் ஜனவரி மாதம் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எட்டு மாதம் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டார். அவர்து தடை காலம் வரும் செப்டம்பர் மாதம் வரை இருக்கிறது ஆனால் துலீப் கோப்பை தொடர் ஆகஸ்ட் மாத மாத இறுதியில் நடக்கிறது. தற்போது அவருக்கு விதிக்கப்பட்ட தடையையின்படி அவரால் அதிகாரப்பூர்வமாக ஆட முடியாது ஆனால். பிசிசிஐ அவரது பெயரை அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here