அறுவை சிகிச்சையை இங்கிலாந்தில் முடித்துவிட்டு தற்போது நாடு திரும்புகிறார் டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் விருதிமான் சஹா.

இந்திய டெஸ்ட் அணியில் தோனி ஓய்விற்கு பிறகு தொடர்ந்து இடம்பெற்று வரும் சஹா, ஐபில் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் இடம் பெறவில்லை.

அதன்பிறகு, சர்வதேச கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு இவரது உடல்தகுதி ஆலோசகர், சஹா நிச்சயம் இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆக வேண்டும்.

இல்லையெனில், இவரால் இனி கிரிக்கெட் ஆட முடியாது எனவும் கூறியதால்,  இங்கிலாந்தில் அறுவை சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.

சிகிச்சை முடித்துவிட்டு தற்போது நாடு திரும்பியுள்ளார் சஹா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here