ஆசிய கண்டத்தின் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில்  45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள்  கலந்து கொள்கின்றனர்.

மொத்தம் 40 விளையாட்டுகளில் 462 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் இருந்து 572 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. ஹாக்கி, டேபிள் டென்னிஸ், வில்வித்தை, பாட்மிண்டன், கபடி, தடகளம், மயல்யுத்தம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

இம்முறை 36 போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது. 2014-ம் ஆண்டு இன்ஜியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 57 பதக்கங்களை கைப்பற்றி 8-வது இடத்தையே பிடித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here