ஆசியக்கோப்பை 18வது சீசன் இந்தோனேசியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை இந்திய அணி சார்பில் வீரர்கள், பயிற்சியாளர்கள் உதவியாளர்கள் என கிட்டத்தட்ட 750 வீரர்களுக்கும் மேல் கலந்துகொள்கின்றனர்.

இதற்கான வழியனுப்பும் நிகழ்வு டெல்லியில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் மற்றும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் போன்ற பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆசியா விளையாட்டு போட்டிகளில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய அணி சார்பில் தேசிய கோடியை ஏந்தி செல்வார் என அறிவிக்கப்பட்டது. இவரது வயது வெறும் 20 ஆகும்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளின் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிட தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here