இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும், ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடியது.

இதில் 5 ஒருநாள் போட்டிகளில் 5க்கு  0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.இதனை அடுத்து ஒரே ஒரு போட்டிகொண்ட டி20 போட்டியில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. இதில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை எடுத்தது

அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 19.4 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது .இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அதன் பலத்தை நிரூபித்துள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here