ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியுடன் எத்தனை போட்டிகள் வந்தாலும் அனைத்திலும் பாகிஸ்தான் அணியே வெற்றி பெறும் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் துபாயில் துவங்க உள்ளது. இந்த தொடரின் மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது.

பரம எதிரிகளாக காலம் காலமாக பாவிக்கப்பட்டு வரும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டிக்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ள நிலையில், இந்திய அணியுடனான போட்டியில் பாகிஸ்தானே வெற்றி பெறும் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய சர்பராஸ் அஹமது “‘இந்திய அணிக்கு எதிரான ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது தான். சாம்பியன்ஸ் டிராபி போட்டி முடிந்து 1 ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. பழைய விஷயங்களை விட்டு விட்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவது தான் எல்லா அணிகளும் செய்யும். ஆனால், இந்தியாவுடனான போட்டியில் எத்தனை முறை மோதினாலும் நாங்கள் தான் வெல்வோம், கோஹ்லி இல்லாதது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரும் பலம்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here