இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

இந்த போட்டியில், இரண்டு இன்னிங்சிலும் மூன்று கேட்ச்களை அபாரமாக பிடித்தார். முதல் இன்னிங்சில் ப்ரூயின் அடித்த பந்து முதல் ஸ்லிப்பையும் தாண்டி சென்றது. அதை அபாரமாக பாய்ந்து பிடித்தார். 2-வது இன்னிங்சில் ப்ரூயின் லெக் சைடில் அடித்த பந்தை இடது கையால் அபாரமாக பாய்ந்து பிடித்தார். அதன்பின் பிலாண்டர் அடித்த பந்தையும் சிறப்பாக பிடித்தார்.

மூன்று முறையும் பந்து வீசியவர் உமேஷ் யாதவ். அபாரமான கேட்ச்களை பிடித்த அவருக்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன் என்று உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here