2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசம் அணி தங்கள் நாட்டில் இரு டி20 போட்டிகளை நடத்துகிறது. ஆசிய லெவன் வீரர்கள் மற்றும் உலக லெவன் வீரர்களுக்கு இடையே இந்தப் போட்டி நடக்கிறது.

இந்தப் போட்டிகள் 2020 மார்ச் 18 மற்றும் 21-ம் தேதிகளில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிகளை ஐசிசி அங்கீகரித்துள்ளது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியில் இருந்து 7 வீரர்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ அமைப்பிடம் கேட்டுள்ளது. அதில் முதல் வீரர் தோனி. அதன்பின் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ் குமார், ஜடேஜே ஆகியோரை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி கூறுகையில், “வங்கதேசம் அடுத்த ஆண்டு ஆசிய லெவன், உலக லெவன் இடையே டி20 போட்டி நடத்தவிருக்கிறது. இதில் 7 இந்திய வீரர்களை அனுப்ப பிசிசிஐ அமைப்பிடம் கேட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

வங்கதேச வாரியத்தின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டால் இந்தப் போட்டிகளில் தோனி விளையாடுவார். ஆனாலும், இன்னும் தோனியின் எதிர்கால வாழ்க்கை எதிர்பார்ப்புக்கு உள்ளதாகவும், ரகசியமாகவுமே இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here