இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிகமில் இன்று துவங்குகிறது.

நாட்டிகம் டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் மற்றும் முரளி விஜய் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரிஷப் பண்ட், பும்ராஹ் மற்றும் ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த போட்டிக்கான இந்திய அணி;

முரளி விஜய், கே.எல் ராகுல், புஜாரா, விராட் கோஹ்லி, ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், குல்தீப்  யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா

இங்கிலாந்து அணி;

அலெய்ஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், ஒலி போப், பாரிஸ்டவ், ஜாஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான், அடில் ரசீத், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ்  ஆண்டர்சன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here