கடந்த இரண்டு வருட டிஎன்பெல்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத மதுரை அணி, இந்த வருட டிஎன்பிஎல் தொடரில் அற்புதமாக ஆடி இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் 14 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றது இல்லை மதுரை அணி.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சீசேம் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இறுதிச்சுற்றில் அந்த அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கோவை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மதுரை 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக, டாஸ் வென்று பேட்டிங் செய்த கோவையில் வெங்கடராமன் அதிகபட்சமாக 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 45 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் மிதுன் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மதுரை தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

பின்னர் ஆடிய மதுரையில் தொடக்க வீரர் அருண் கார்த்திக் அதிகபட்சமாக 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 79 ரன்கள் எடுத்தார். அவருடன் ஷிஜித் சந்திரன் 7 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஜோடி அணியை வெற்றிக்கு வழிநடத்தியது. கோவை தரப்பில் மிதுன், நடராஜன், மணிகண்டன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அருண் கார்த்திக் ஆட்டநாயகன் ஆனார்.வ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here