பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன்னதாக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி அந்த தொடரையும் கைப்பற்றி இருந்தது பாகிஸ்தான் அணி. தற்போது இந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் கூட விடாமல் அனைத்தையும் வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஜிம்பாவே அணி கடந்த பல வருடங்களாக மிக மோசமாக விளையாடி வருகிறது. பல்வேறு நாட்டு அணி வீரர்களும் ஜிம்பாப்வே அணி மிகவும் சொம்பை இருக்கிறது என்று கூறி வருகின்றனர் மேலும் அந்த அணிக்கு எதிராக படைக்கும் சாதனைகள் எப்படி ஒரு சர்வதேச அணிக்கு எதிரான சாதனையுடன் ஒப்பிடப்படுகிறது என்பது பற்றியும் பேசி இருந்தனர்.அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையில் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் உள்ளது.

இந்த நிலையில்தான் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்தால் 2 அல்லது 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் ஆனால் இளிச்சவாயன் கிடைத்தான் என்று பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வேயுடன் ஆடி அத்தனை போட்டியும் வென்றுள்ளது.

இதுபோன்ற காரியத்தை பாகிஸ்தான் காலகாலமாக செய்து வருகிறது. நேற்று நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் கூட 350க்கும் மேல் ரன்களை அடித்து ஜிம்பாப்வே தொடரை வென்றது பாகிஸ் தான் பின்னர் மிக எளிதாக 150+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here