இந்திய அணியின் தோல்விகள் பலரை பலவிதமாக பாதித்துள்ளது. இதுவரை இங்கிலாந்து சென்ற இந்திய அணிகளில் தற்போது சென்றிருக்கும் அணியே மிகசிறந்த அனி என ஜாம்பவான்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் புகழ்ந்த நிலையில் முத்தாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோசமான தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி.

இந்த தோல்விகளுக்கு முழுக்க முழுக்க காரணம் இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் அவர்களது திறமைக்கு ஏற்ப சரியாக ஆடினார் மேலும் முதல் போட்டியில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் .

இரண்டாவது போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் ஆனால் பேட்ஸ்மேன்கள் அவர்களின் திறமைக்கு ஏற்ப சரியான பங்களிப்பை கொடுக்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் இதனால் இந்திய அணி தோல்வியை தழுவியது .

தற்போது இந்த தோல்விகளின் பின்னால் பல்வேறு விமர்சனங்களும் முன்னால் வீரர்களின் காட்டமான தாக்குதல்களும் இருந்து வருகிறது இதையெல்லாம் பொறுத்திருந்து பார்த்த விராட் கோலி தனது பேஸ்புக் பக்கத்தில் தன் ரசிகர்களுக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்கள் எப்போதும் கைவிட மாட்டோம் அதேபோல் எங்களையும் நீங்கள் கைவிடாதீர்கள் உங்களை நாங்கள் பெருமைப்படுவோம் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் விராட் கோலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here