அனைத்து வீரர்களும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு இன்னும் சில காலங்களே இருப்பதால் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு உத்திரபிரதேச மாநிலத்தில் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பலதரப்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகத் அளித்த பெட்டியில், நாங்கள் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என ஒட்டுமொத்த நாடே நம்புகிறது. ஆனால், எங்களுக்கான போதிய வசதிகளை செய்து கொடுத்தால் மட்டுமே எங்களால் அதை நிறைவேற்ற முடியும்.

இங்கு பயிற்சி முகாமில் உணவு மற்றும் தாங்கும் வசதிகள் சிறப்பாக உள்ளது. அனால், பயிற்சியில் ஈடுபடும் பகுதி மிகுந்த வெப்பமானதாக உள்ளது. மின்சாரமும் அவ்வப்போது துண்டிக்கப்பட்டு திரும்ப வருகிறது. பயிற்சி செய்யும் களமும் வீரர்களுக்கு எளிதில் காயம் ஏற்படும் வண்ணம் உள்ளது. மற்ற நாடுகளுக்கு இணையாக செய்து கொடுத்தால் தானே எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என பல கேள்விகளை முன் வைத்தார் வினிஷ் போகத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here