லண்டனில் 14வது உலகக்கோப்பை மகளிர் ஹாக்கி போட்டிகள் இன்று துவங்க இருக்கின்றன. முதல் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

14வது உலகக்கோப்பை மகளிர் ஹாக்கி போட்டிகள் இன்று லண்டனில் கோலாகலமாக துவங்க இருக்கின்றன.

இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய அணி பி பிரிவில் உள்ளது.

பிரிவுகள் மற்றும் அணிகள்

‘ஏ’ பிரிவு: நெதர்லாந்து, தென் கொரியா, இத்தாலி, சீனா

‘பி’ பிரிவு: இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து

‘சி’ பிரிவு: அர்ஜென்டினா, ஜெர்மனி, ஸ்பெயின், தென் ஆப்பிரிக்கா

‘டி’ பிரிவு: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், பெல்ஜியம்

லீக் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிக்கும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும், மற்ற இரு அணிகள் தொடரில் இருந்தே வெளியேறும்.

இன்று மாலை 6.30 மணிக்கு துவங்க இருக்கும் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் விவரம்:

கோல் கீப்பர்கள்: சவிதா, ரஞ்சனி.

பின்களம்: சுனிதா லக்ரா, தீப்கிரேஸ், தீபிகா, குர்ஜித்கபூர், ரீனா கோக்கர்.

நடுகளம்: நமீதா டாபோ, லிலிமா மின்ஸ், மோனிகா, நேகா கோயல், நவ்ஜோத்கபூர், நிக்கி பிரதான்.

முன்களம்: ராணி ராம்பால் (கேப்டன்), வந்தனா, நவ்நீத் கவூர், லால் ரேம் ஷிமி, உதிதா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here