2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் நேற்று பேசிய புஜாரா, தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா ஸ்லெட்ஜ் செய்ய முன்றார் என்றும் தான் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘அவர் (ரபாடா) என்ன சொன்னார் என்பது நினைவில் இல்லை. ஆனால், அவர் எப்போதும் பேட்ஸ்மேன்களை நோக்கி ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு பேட்ஸ்மேனாக அவர் என் கவனத்தை திசைத் திருப்ப முயற்சி செய்வார் என்பது எனக்குத் தெரியும்.

அவர் மட்டுமல்ல, எந்த பந்துவீச்சாளரும் ஏதாவது தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். அதனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிக்க மாட்டேன். ஏனென்றால், பேட்ஸ் மேனாக என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் என் கவனம் இருக்கும். எனது மனநிலையில் உறுதியாக இருக்கும்போது, அவர்கள் சொல்வதை கவனிக்க மாட்டேன்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here