நான் எந்த அணிக்குப் போனாலும் மரியாதை இல்லை. நான் என்ன செய்தேன் என்று யாரும் பார்ப்பதில்லை. என்ன செய்யவில்லை என்றுதான் பார்க்கிறார்கள். நான் எந்த அணிக்கும் சுமைதான் என்று மே.இ.தீவுகள் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் உருக்கமாகத் தெரிவித்தார்.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் எஸ்எஸ்எல் டி20 லீக்கில் ஜோஸி ஸ்டார்ஸ் அணியில் கெயில் விளையாடினார். இதில் 6 இன்னிங்ஸ் சேர்த்து 101 ரன்கள் சேர்த்தார். அந்த அணியும் சூப்பர் லீக்கிற்குள் செல்ல முடியவில்லை. இதனால், அந்த அணியில் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு கெயில் வெளியேறினார்.

”என்னைப் பொறுத்தவரைக்கும் நான் ஏதாவது ஒன்று அல்லது 3 போட்டிகளில் சரியாக விளையாடாமல் ரன் அடிக்க முடியாமல் போனால், நான் அணிக்குப் பாரமாகிவிடுகிறேன். நான் தென் ஆப்பிரிக்காவில் நடந்த எம்எஸ்எல் டி20 அணியை மட்டும் குறிப்பிடவில்லை.

ஏதாவது ஒரு இடத்தில் நான் சரியாக விளையாடாமல் போனால், அத்தோடு என் வாழ்க்கை முடிந்துவிடும். கெயில் சரியாக விளையாடவில்லை, அவர் மோசமான பேட்ஸ்மேன், மற்ற அனைத்து விஷயங்களிலும் மோசமானவர் என்று என்னைப் பழிப்பார்கள். இதுபோன்ற விஷயங்களை நான் பொதுவாகக் கடந்து வந்துவிடுவேன். இதை எதிர்பார்த்துதான், இதோடு சேர்ந்துதான் வாழ்ந்து வருகிறேன்’’.

இவ்வாறு கிறிஸ் கெயில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here