மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அணியில் இடம் இப்படியொரு தோல்வியை எதிர்பாராத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது அதிரடி முடிவுகளை எடுக்கத் துவங்கி உள்ளது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் படுமோசமாக தோல்வியடைந்து ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை தலைகுனிய வைத்தது.

இதையடுத்து இந்த தோல்விக்கான காரணங்களை கேட்டு இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோருக்கு விசாரணைக்கான பிடியை வைத்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

ஏனெனில் இதுவரை இங்கிலாந்து சென்ற நிலையிலேயே இந்த அணிதான் மிகத் திறமையான அணி எனவும், இந்த அணியிடம் இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை எதிர் பார்க்கலாம் எனவும் பல ஜாம்பவான்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கூறிவந்தனர்.

அந்த நினைவுகளை தவிடு பொடியாக்கும் வண்ணமாகிறது இந்த இந்திய அணி இதனால் தற்போது தோல்விக்கான விளக்கத்தைக் கேட்டு கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு நெருக்கடி கொடுத்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here