தோனி குறித்து தேர்வுக் குழுவினரின் கருத்தை அறிந்த பிறகே தோனியின் எதிர்காலம் குறித்து தெரிவிக்க முடியும் என்று பிசிசிஐ தலைவராக தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது பிசிசிஐ தலைவராக தேர்வாகி உள்ளவருமான சவுரவ் கங்குலி தோனி நிலை குறித்து தெரிவித்துள்ளார். அதில், “வரும் 24ஆம் தேதி நான் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவினரை சந்திக்க உள்ளேன்.

அப்போது அவர்கள் தோனியின் நிலை குறித்து எடுத்துள்ள முடிவை தெரிந்துக் கொள்வேன். அதன்பின்னர் தான் தோனியின் எதிர்காலம் குறித்து தெரிவிப்பேன். மேலும் தோனியின் விருப்பத்தை அரிய அவரிடமும் பேச உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here