இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ் இந்திய டென்னிஸ் நிர்வாகத்தின் மீதுள்ள கடும் கோபத்தினால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து விலகினார்.

இவர் கடந்த 2010, 14 ஆண்டுகளின் ஆசிய விளையாட்டுகளில் கலந்துகொள்ளவில்லை. இம்முறை தாமாக முன்வந்து ஆட விருப்பமும் தகுதியும் இருப்பதாக தெரிவித்தார். இதனால் தேர்வும் செய்யப்பட்டார்.

இந்நிலையில், தான் ஆசிய விளையாட்டுகளில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார். அவர் கூறுகையில், இரட்டையர் பிரிவில் சிறப்பாக ஆடும் வீரரை நான் கேட்டேன், ஆனால் ஒற்றையர் பிரிவில் ஆடும் வீரரை எனக்கு தந்துவிட்டனர். இது நியாயமற்றது என கூறி விலகினார்.

இவர் இந்தியாவிற்க்காக 5 தங்கங்கள் உட்பட 8 பதக்கங்களை வென்று தந்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here