கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான அணியுடனான டெஸ்ட் தொடருக்கு பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் இரவு மது அருந்திவிட்டு பனிரெண்டு மணிக்கு மேல், வீதியில் இருந்த இருவரை மிகவும் மூர்க்கத்தனமான தாக்கி கீழே விழச்செய்தார்.

இந்த பிரச்சனை பெரிதாக அப்போது பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கடும் நடவடிக்கைக்கு உட்பட பல முக்கியமான போட்டிகளில் அவரால் ஆடமுடியவில்லை.

மேலும் அந்த வருடம் நடந்த ஆஷஸ் தொடரில் இருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டது. அதன் பின்னர் போலீசில் அந்த இருவரும் புகார் செய்ய அந்த வழக்கு நடைபெற்று வந்தது.

ஒரு வழியாக சென்ற வாரம் அந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது இந்த விசாரணை ஒரு வாரம் நடக்க இன்று அவர் தவறு செய்யவில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

அதாவது பென் ஸ்டோக்ஸ் அந்த இருவரையும் அடித்து உண்மைதான் ஆனால் தற்காப்புக்காக அடித்தார் என நீதிமன்றம் கூறியுள்ளது.

இதே விஷயத்தைதான் பென் ஸ்டோக்ஸ் நீதிமன்றத்தில் கூறியுள்ளார் அதனை அப்படியே ஏற்று நீதிமன்றம் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ததுள்ளது.

மேலும், வரும் 18ம் தேதி துவங்க உள்ள இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் ஆடுவது உறுதியாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here