குரேஷியா கால்பந்து வீரர்களின் பெருந்தன்மையை கொண்டாடும் விளையாட்டு உலகம்

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் குரேஷியா அணி தோல்வியடைந்திருந்தாலும் ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் தன் பக்கம் திருப்பிய குரேஷியா அணி வீரர்கள் தற்போது தங்களின் பெருந்தன்மையான மூலம் விளையாட்டு உலகை மீண்டும் கவர்ந்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்ற குரேஷியா என்னும் கத்துக்குட்டி அணி தன்னை குறைத்து  மதிப்பிட்ட அனைத்து அணிகளையும் கதறவிட்டு ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதி போட்டி வரை தகுதி பெற்றது. இறுதி போட்டியில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து பிரான்ஸிடம் கோப்பையை இழந்தாலும் இதற்கு முன் பெயர் கூட கேள்விப்பட்டிராத இந்த குட்டி அணி ஒட்டுமொத்த விளையாட்டு உலகின் பாராட்டையும் பெற்றது.

தோல்வியடைந்திருந்தாலும் கெத்தாக நாடு திரும்பியுள்ள குரேஷியா வீரர்கள் தற்போது தங்களின் பெருந்தன்மையான செயலின் மூலம் விளையாட்டு உலகை மேலும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

ஆம்.,  முதுகு வலி காரணமாக முதல் போட்டியோடு நாடு திரும்பிய தங்களது சக வீரர் நிகோலா காலினிக்கிற்கு தாங்கள் வென்று வந்த வெள்ளி பதக்கத்தை ஒட்டுமொத்த வீரர்களும் சென்று கொடுத்துள்ளனர்.

அணியின் வெற்றிக்கு உதவாத நிலையில், அந்தப் பதக்கத்தை பெறும் தகுதி தனக்கு இல்லை என்று அதை வாங்க காலினிக் மறுத்துவிட்டார்.

இருந்தபோதிலும் வெற்றி மமதையில் இல்லாமல் தங்கள் அணியின் சக வீரருக்கு பரிசு அளித்த அணியின் மொத்த வீரர்களும், அதை வாங்க மறுத்ததன் மூலம் காலினிக்கும், தற்போது பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here