இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பி.சி.சி.ஐ.,யின் புதிய தலைவராக(கேப்டன்) தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிபதி லோதா குழு பரிந்துரைத்த நிர்வாகிகளின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இவர்களின் ஆலோசனை, அதிகாரத்தின் கீழ் தற்போது கிரிக்கெட் வீரர் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிசிசிஐ.,யின் அடுத்த தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் லோதா குழு நியமித்த விதிகளுக்கு பலர் பொறுந்தவில்லை. ஆனால் கங்குலி இந்த விதிகளுக்கு சரியாக பொருந்துவதாகவும், அதோடு 4 ஆண்டுகள் ஏதேனும் மாநில கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்க வேண்டும் என்ற விதிக்கு பொருந்துகிறார்.

மேலும் இந்திய கிரிக்கெட் தொழில்நுட்ப பிரிவு, ஐபிஎல் ஒழுங்கமர்வு குழு உறுப்பினர், கிரிக்கெட் ஆலோசகர் குழு என பலவற்றில் இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியால் பெரிதும் மதிக்கப்பட்டும் முன்னாள் வீரர்களில் ஒருவராக உள்ளார். இதனால் கங்குலி நியமிக்க அதிக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here