உடலநலக் குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கருப்பு நிற பேட்ச்சுடன் விளையாடி வருகின்றனர்.

கடந்த 1958-59 காலகட்டத்தில் முதல்தர கிரிக்கெட்டில் தடம் பதித்த அஜித் வடேகர், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் 1966-67 காலகட்டத்தில் இடம்பிடித்தார். 1966-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் களம் புகுந்தார்.

இவர் தலைமையிலான இந்திய அணி கடந்த 1971-ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டிங்ஹாம் டிரெண்ட்பிரிட்ஜ் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வடேகரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here