இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியை இங்கிலாந்து அணியினர் கொண்டாடினார்கள். அப்போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சக வீரர் ஸ்டூவர்ட் பிராட்டுடன் இணைந்து மரங்கள் அடர்ந்த இடம் ஒன்றில் கோல்ப் விளையாடினார். அதை பிராட் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஆண்டர்சன் அடித்த பந்து அருகில் இருந்த மரத்தில் பட்டு அவரது முகத்தை நோக்கி திரும்பியது. இதில் ஆண்டர்சன் முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிராட், பயப்படும் படியான காயம் இல்லை. அவர் நலம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here