21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவநடைப்பெற்று வருகின்றன. இந்த தொடரின் போட்டிகள், ரஷ்யாவின் பல முக்கிய நகரங்களில் பிரமாண்ட மைதானங்களில் நடைப்பெற்று வருகின்றன நேற்று ‘எஃப்’ பிரிவில் இடம்பெற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி கட்டாயம் வெற்றியை நோக்கி தென் கொரியாவை எதிர்கொண்டது.

கோல் கீப்பர் இல்லாத ஜெர்மனி :

இதையடுத்து போட்டியை வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது என்ற நிலையில், ஜெர்மனியின் கோல் கீப்பரும் மற்ற வீரர்களைப் போல களத்தில் இறங்கி விளையாடினார்.இந்நிலையில் கொரியா பக்கம் பந்தை கடத்தி சென்ற ஜெர்மனி வீரர்கள், களத்தில் இருந்த கீப்பர் மானுவல் நியூவரிம் பந்தை பாஸ் செய்தனர்.

சற்று தடுமாறிய மானுவலிடமிருந்து, தென் கொரிய வீரர் லாபகமாக பந்தை தன் வசப்படுத்தி, ஜெர்மனி கோல் பக்கம் இருந்த தென் கொரிய வீரர் சன் ஹியூங்-மின்னிடம் லாங் பாஸ் செயதார்.
அதை லாபகமாக தடுத்த சன், கோல் அடித்து ஜெர்மனிக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here