அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் காலிறுதி போட்டியில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் கனடாவின் ராவ்னிச்சை எதிர்கொண்டார்.

பரபரப்பாக சென்ற முதல் செட்டில் ஜோகோவிச் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்பு சிறப்பாக தனது ஆட்டத்திற்கு திரும்பிய ராவ்னிச் இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றினார்.

இறுதி செட்டில் யார் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6-3 என ராவ்னிச்சை எளிதாக வீழ்த்தி ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இவர் அரையிறுதியில் குரோஷியாவை சேர்ந்த சிலிசிச்சை எதிர்கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here