சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடர் தற்போது அரையிறுதியை எட்டியுள்ளது.

கடைசி காலிறுதி போட்டியில் சுவிஸ் நாட்டை சேர்ந்த வாவ்ரின்கா மற்றும் ரோஜர் பெடரர் இருவரும் மோதின. இதில் முதல் செட்டில் 7-6 (7-2) என வாவ்ரின்கா முன்னிலை வகித்தார்.

இரண்டாவது செட்டில் பெடரர் 7-6 (8-6) என போராடி வென்றார். ஆனால், மூன்றாவது செட்டில் மொத்த வித்தையும் இறக்கியது போல 6-2 என வாவ்ரின்காவை வதம் செய்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த டேவிட் கோபினை எதிர்கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here