13 ஆவது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி தொடர் சென்னையில் நடந்தது. ஷாப்பிங் மாலில் என்றவுடன் ஆச்சரியம் கொள்ளாதீர்கள். பொதுவாக ஸ்குவாஷ்  போட்டிகளுக்கு பெரிய இடம் தேவைப்படாது 3000 சதுர அடி இடம் இருந்தால் போதும் ஒரு பெரிய ஸ்குவாஷ் தொடரை நடத்திவிடலாம்.

இதனால் தான் உலகில் நடக்கும் பெரிய பெரிய ஸ்குவாஷ் தொடர்கள் எல்லாம் அந்தந்த நாட்டில் உள்ள ஷாப்பிங் மால் அல்லது பெரிய வணிக வளாகத்தில் நடைபெறும். தற்போது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்தது

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் எகிப்து வீரர் மோஸ்தபா அசல் 11-7, 13-11, 11-4 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் மார்வன் டாரெக்கை (எகிப்து) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ரோவன் ரெடா அராபி (எகிப்து) 11-4, 11-9, 10-12, 11-9 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை ஹனியா எல் ஹம்மாமியை தோற்கடித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். உலக ஜூனியர் அணிகள் சாம்பியன்ஸ் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா உள்பட 24 நாடுகள் கலந்து கொள்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here