தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய விபி காஞ்சி வீரன்ஸ் அணி பந்து வீச்சாளர் மோகித் ஹரிஹரன் இரண்டு கைகளிலும் பந்து வீசி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இடது கை ஆட்டக்காரர்களுக்கு இடக்கையில் சுழற்பந்து வீசியும், வலது கை ஆட்டக்காரர்களுக்கு வலது கையில் சுழற்பந்து வீசியும் அதிரடி காட்டியுள்ளார். 18 வயது இளம் வீரர் மோகித் ஹரிஹரனின் இந்த பவுலிங் ஸ்டைல் டி.என்.பி.எல் போட்டியில் ஹைலைட்டாக அமைந்துள்ளது. தனித்துவமான பவுலிங் ஸ்டைல் இருந்தும், கொடுக்கப்பட்ட நான்கு ஓவர்களில் ஒரு விக்கெட் கூட மோகித் எடுக்கவில்லை என்பது வருத்தமான செய்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here