டி.என்.பி.எல் தொடரில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியுடனான இன்றைய போட்டியில்  மதுரை பாந்தர்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

டி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் கடந்த 11ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக வெளிமாநில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த தொடரின் இன்றைய போட்டியில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற டூட்டி பாட்ரியாட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுசிக் காந்தி மற்றும் எஸ்.தினேஷ் ஆகியோர் களமிறங்கினர்.

தினேஷ் 35 ரன்களும், சுப்ரமண்யன் ஆனந்த் 44 ரன்களும், அக்ஷய் சீனிவாசன் 42 ரன்களும் எடுத்தனர். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் அபிஷேக் தன்வர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் சிறப்பாக ஆடி 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து, ரோகிட் 28 ரன்களும், ஸ்ரீஜித் சந்திரன் 289 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஜெகதீசன் கவுசில் 22 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here