உலக பேட்மிண்டன் சம்மேளன வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் பின்னடைவை சந்தித்துள்ளார்.

உலக பேட்மிண்டன் சம்மேளனம், பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. புதிய தரவரிசை பட்டியலின் படி இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வாலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இருந்த சாய்னா தற்போது 11வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் தொடரின் காலிறுதி போட்டியில் சாய்னா தோல்வியடைந்ததன் எதிரொலியாக தரவரிசை பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

உலகபோட்டி இறுதி போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்த இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனை பி.வி சிந்து இந்த தரவரிசை பட்டியலில் 3-வது இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

இதே போல் ஆண்களுக்கான தரவரிசையில் கடாம்பி ஸ்ரீகாந்த் 8-வது இடத்திலும், பிரனாய் 11-வது இடத்திலும் உள்ளனர்.

BWF உலக தரவரிசை

ஆண்கள் ஒற்றையர்

ரேங்க் நாடு ஆட்டக்காரர் புள்ளிகள் / போட்டி
1 டென்மார்க் விக்டர் அக்ஸெல்சன் 88,554 / 11
2 மலேஷியா லீ சோங் வேய் 77,383 / 14
3 சீனா எஸ்.ஐ.ஐ. யூகி 74,762 / 15
4 கொரியா சோன் வான் ஹோ 72,172 / 18
5 சீன தைபே  டின் சென் 67,944 / 18
6 இந்தியா கிதாம்பி ஸ்ரீகாந்த் 65,235 / 11
7 ஜப்பான் கெண்டோ மொமோடா 64,757 / 13
8 சீனா நீண்ட காலம் 63,248 / 12
9 சீனா லி டான் 57,113 / 14
10 ஹாங்காங் என்ஜி கா லாங் ஆங்குஸ் 54,898 / 18

பெண்கள் ஒற்றையர்

ரேங்க் நாடு ஆட்டக்காரர் புள்ளிகள் / போட்டி
1 சீன தைபே டை சுயிங்க் 96,817 / 13
2 ஜப்பான் அகேன் யமுகுச்சி 84,963 / 16
3 இந்தியா பிவி சிந்து 83,414 / 16
4 தாய்லாந்து ரட்சனோக் இன்டானான் 77,487 / 16
5 சீனா சேன் யூஃபி 74,889 / 16
6 ஜப்பான் நொஸோமி 68,287 / 13
7 சீனா ஹி பிஞ்சியொ 67,509 / 16
8 ஸ்பெயின் கரோலினா மார்யின் 67,266 / 14
9 கொரியா சன் ஜி ஜி ஹுன் 58,753 / 18
10 இந்தியா சைனா நெஹால் 56,394 / 13

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here