எத்தனை கேப்டன்கள் வந்தாலும் முன்னாள் கேப்டன் தோனியே உண்மையான தலைவன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இந்திய அணிக்கு மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த பெருமைக்குரியவர்.

கோஹ்லிக்கு வழிவிட்டு தானாக தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோஹ்லியின் கீழ் சாதரண ஒரு வீரராக விளையாடி வருகிறார். சமீபகாலமாக பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து வலுத்து வரும் நிலையில், தோனியை போன்ற உண்மையான தலைவன் யாரும் கிடையாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நெஹ்ரா கூறியதாவது, “தோனி கேப்டனாக பொறுப்பேற்ற புதிதிலே, 2007ம் ஆண்டில் டி20 உலக கோப்பையை தோனி கைப்பற்றினார். நெருக்கடியான சூழலை எப்படி கையாள வேண்டும் என்பது தோனிக்கு நன்றாக தெரியும். இக்கட்டான நிலைகளில் டென்ஷனாகாமல் கூலாக ஆடி, தனக்கே உரிய பாணியில் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பவர் தோனி. அதுமட்டுமல்லாமல் அணி வீரர்களிடமிருந்து அவர்களது பெஸ்ட் ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதிலும் தோனி வல்லவர் என தோனியை நெஹ்ரா புகழ்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here