பெண்களுக்கான (15 வயது) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த இந்திய அணி 10–1 என்ற கணக்கில் பூடானை வீழ்த்தியது.

பூடானில், 15 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் 3வது சீசன் நடக்கிறது. இதில் இந்தியா, பூடான், வங்கதேசம், நேபாளம் என, 4 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் நேபாளத்தை வீழ்த்திய இந்திய அணி, 2வது போட்டியில் பூடானை எதிர்கொண்டது.

தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, 6 புள்ளிகளுடன் பைனலுக்கு முன்னேறியது. இந்திய அணி, தனது 3வது லீக் போட்டியில் (அக். 13) வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. ஏற்கனவே வங்கதேச அணியும் பைனலுக்கு தகுதி பெற்றிருப்பதால், இப்போட்டி பைனலுக்கான ஒத்திகையாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here