ஜெர்மனி நாட்டிற்காக கால்பந்து விளையாடி வரும் 29 வயதான மீஸட் ஓஸில் தற்போது பல விமர்சனங்களை பெற்று வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக மீஸட் ஓஸில் மீது பல விமர்சனங்கள் வந்தது. ஜெர்மானியர்கள் இவர் மீது வெளிநாட்டவர் என்னும் விமர்சனத்தை அடிக்கடி வைத்தனர்.

மீஸட் ஓஸில் துருக்கியைச் சேர்ந்தவர் இவரது தந்தையும் தாயும் பின்னர் ஜெர்மனிக்கு குடியேறினர் தற்போது ஜெர்மனி அணிக்கு ஆடி வரும் இவர் தன் மீது நிறவெறி விமர்சனம் வைத்தவர்களை சாடியுள்ளார்

 

இரண்டு வாரங்களுக்கு முன்பு துருக்கி நாட்டின் பிரதமருடன் ஒரு புகைப்படத்தை எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் மீஸட் ஓஸில். இது பிடிக்காத ஜெர்மானியர்கள் மற்றும் ஜெர்மனி ஊடகங்கள் இவரை வந்தேறி என்று கூறி விமர்சனம் வைத்தன. இரண்டு வாரங்களாக இந்த விமர்சனங்களை கேட்டுவிட்டு அமைதியாக இருந்த  ஓஸில்தற்போது கொதித்தெழுந்துள்ளார்.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பக்கத்தில் மூன்று பக்கங்களுக்கு விளக்கத்தையும் கொடுத்து தன்னை விமர்சித்தவர்களுக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்

நான் 2014ஆம் ஆண்டு ஜெர்மனி அணி உலக கோப்பை வெற்றி பெறும் போது அந்த அணியில் இருந்தேன் அப்போது நான் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவன் ஆகிவிட்டேன் என கொண்டாடினார்கள். ஆனால் துருக்கி பிரதமர் உடன் ஒரு போட்டோ எடுத்த உடன் நான் வெளிநாட்டவன் ஆகிவிட்டேன் .

அதனுடன் சேர்த்து இந்த முறை ஜெர்மனி அணி உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் வென்றதற்கு வெளியேறியதற்கு நான்தான் காரணம்  என மீது விமர்சன தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்ல விரும்புகிறேன் நான் இனிமேல் ஜெர்மனி அணிக்கு ஆகப்போவதில்லை என்னை விட்டு விடுங்கள் இந்த நிற வெறி தாக்குதல் போதும் உங்கள் இயலாமையை என் மீது தினிக்கதீர்கள்/ என தன்னை விமர்சித்தவர்களை குறிப்பாக ஜெர்மனி கால்பந்து வாரிய தலைவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here