உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் குவித்தனர். இதில் சிறப்பாக அலெக்ஸ் கேரி 71 ரன்கள் மற்றும் உஸ்மன் கவாஜா 88 ரன்கள் குவித்தனர். இப்போட்டியில் ட்ரெண்ட் போல்ட் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார்.

244 ரன்கள் இலக்காக களமிறங்கிய நியூசீலாந்து அணியின் தொடக்க வீரர்கள் குப்தில் 20 மற்றும் நிக்கோலஸ் 8 ரன்கள் குவித்து வெளியேறினார்கள். இதன் பின்  வில்லியம்சன் 40 ரன்கள் மற்றும் ரோஸ் டெய்லர் 30 ரன்கள் குவித்து வெளியேறினர். இதன் பின் அனைவரும் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்தனர். ஆஸ்திரேலியா அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here