பாகிஸ்தான் அணியில் சமீபகாலமாக பேட்ஸ்மேன்கள் வளர்ந்து வருகின்றனர். அந்த அணியின் ஒருநாள் போட்டி தொடரில் ஆடும் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் மிகவும் வலிமையான வீரர்களாக உள்ளனர்.

தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் பாகிஸ்தான் அணிக்காக அந்த அணியின் தொடக்க வீரர் பஹர் ஸமான் அடுத்தடுத்து பல சாதனைகள் புரிந்து வருகிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு 200 ரன்கள் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றவர் தற்போது தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் 455 ரன்கள் குவித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார் அதாவது இந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் 60 ரன் அடித்து அவுட்டானார் அதன் பின்னர் அடுத்த நான்கு போட்டிகளில் அவரது விக்கெட் விழவேயில்லை.

 

அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் கொடுக்காமல் இரண்டாவது போட்டியில் 43 ரன்னும் மூன்றாவது போட்டியில் 117 ரன்னும் 4வது போட்டியில் 43ரன்னும் அடுத்த போட்டியில் 85 ரன்னும் அடித்தார் இதன் மூலம் மொத்தம் தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் 455 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர் முகமது யூசப் 2002ஆம் ஆண்டு 405 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது தற்போது இந்த சாதனையை முறியடித்துள்ளார் பஹர் ஸமான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here