இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. இப்போட்டி ஹெட்டிங்கிலேயில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களான குல்படின் நைப் (15) ரஹ்மத் ஷா (35) ரன்களுடன் வெளியேறினர். இதன் பின் களமிறங்கிய ஹஷ்மதுல்லா ஷாஹிடி முதல் பந்திலே வெளியேறினார். அஸ்கர் ஆப்கான் (42), முகமது நபி (16), சாமியுல்லா ஷின்வாரி (19), நஜிபுல்லா சத்ரான் (42), இக்ரம் அலி கில் (24), ரஷீத் கான்(8), ஹமீத் ஹாசன் (1), முஜீப் உர் ரஹ்மான் (7) ரன்கள் குவித்தனர். இதில் முஜீப் மற்றும் ஷின்வாரி விக்கெட் இழக்காமல் இருக்கின்றன. 50 ஓவர்கள் முடிவில் 227 ரன்கள் பெற்று 9 விக்கெட்களை இழந்துள்ளனர்.

இதையடுத்து களமிறங்கிய ஃபக்ர் ஜமான் தனது இரண்டாவது பந்திலே விக்கெட் இழந்தார். இமாம் உல் அக் மற்றும் பாபர் அஸ்ஸாம் நிதானமாக விளையாட தொடங்கினர். இவரும் நபியின் ஓவரில் விக்கெட் இழந்தனர். இமாம் 36 மற்றும் பாபர் 45 ரன்களில் வெளியேறினார். இதன் பின் ஓரளவு சீீராக விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள் முகமது ஹபீஸ் (19), ஹுரைஸ் சுஹைல் (27), சர்பராஜ் (18), இமாத் வசீம் (49), சதாப் கான் (11), வஹாப் ரியாஸ் (15) ரன்கள் குவித்தனர். 49.4 ஓவரிலே பாகிஸ்தான் அணி தனது இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

Pakistan’s Imam-ul-Haq (L) and teammate Babar Azam touch gloves after a boundary during the 2019 Cricket World Cup group stage match between Pakistan and Afghanistan at Headingley in Leeds, northern England, on June 29, 2019. (Photo by Lindsey Parnaby / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read LINDSEY PARNABY/AFP/Getty Images)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here