அடுத்த கோடைக்காலத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா வரும்போது, பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணி கேப்டன் விராட் கோலியிடம் அனுமதி கேட்பேன் என்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேன் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பின் டிம் பெய்ன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அடுத்த வருடம் நடைபெற இருக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது முதல் போட்டியை கப்பாவில் நடத்த விரும்புவீர்களா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு டிம் பெய் பதில் அளிக்கையில்  ‘‘நிச்சயமாக. உறுதியாக நாங்கள் முயற்சி செய்வோம்.  இதை நாங்கள் விராட் கோலியால் செயல்படுத்த முடியும். குறிப்பிட்ட நேரத்தில் நாங்கள் அவரிடம் இருந்து பதிலை பெறுவோம். அது உறுதி.

விராட் கோலி நல்ல மனநிலையில் (good mood) இருந்தால், பிங்க்-பால் டெஸ்டிற்குக் கூட அனுமதியை பெறலாம்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here