மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 என்ற கணக்கில் லீசெஸ்டர் அணியை வீழ்த்தி வெற்றி.

2018/19 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் சீசன் நேற்று கோலாகலமாக துவங்கியது. இதில் முதல் போட்டியாக மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லீசெஸ்டர் அணிகள் மோதின.

போட்டி துவங்கிய 90 விநாடிக்குள்ளேயே மான்செஸ்டர் அணியின் நட்சத்திர வீரர் சான்சஸ் அடித்த பந்து, லீசெஸ்டர் அணியின் மோர்கன் கையில் பட, நடுவர் பெனால்டி வழங்கினார்.

இதை சரியாக பயன் படுத்திக்கொண்ட போக்பா இந்த சீசனின் முதல் கோல்லை அடித்தார். அதன் பிறகு, முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கணக்கில் முடிந்தது.

சமன் செய்யும் முனைப்பில் ஆடிய லீசெஸ்டர் அணி, எவ்வளவோ முயர்ச்சி செய்தும் பலனளிக்கவில்லை.

ஆனால், அதற்குள் மான்செஸ்டர் வீரர் லுக் ஷா 83வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து மேலும் பலப்படுத்தினார்.

90+2வது நிமிடத்தில் லீசெஸ்டர் அணியின் நட்சத்திர வீரர் ஜாம்மி வார்டி ஒரு கோல் அடிக்க ஆட்டம் 2-1 என்ற கணக்கில் முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here