இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி நடப்பு 2018ம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 25 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன் மூலம் இந்தாண்டில் அதிக ரன்களை எடுத்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். கோலி இந்தாண்டில் மட்டும் 1404 ரன்கள் இதுவரை எடுத்துள்ளார். வெறும் 25 இன்னிங்ஸில் இந்த ரன்களை எடுத்துள்ளார்.

முன்னதாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேரிஸ்டோவ் 1389 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார். தற்போது கோஹ்லி அவரை விட 15 ரன்கள் அதிகம் எடுத்து முன்னிலை வகிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here