இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.  இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் இது குறித்து சோயிப் அக்தர் தனது யூடியூப் சானலில் கருத்து தெரிவித்துள்ளார்..

தற்போது இருக்கும் பந்துவீச்சாளர்களில் அவருக்கும் மட்டும் தான் ரிவர்ஸ் ஸ்வீங் சிறப்பாக வருகிறது. இந்திய துணை கண்ட ஆடுகளங்களில் இது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் ரிவர்ஸ் ஸ்வீங்கின் ராஜாவாக வலம் வரலாம் என்று ஷமிக்கு அறிவுரை வழங்கினேன்.

அதேபோல தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமே இல்லாத ஆடுகளத்தில் ஷமி விக்கெட் எடுத்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here