கோவாவுக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை ஆட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் இரட்டைச் சதம் அடித்துள்ளார்.

அலூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடியது கேரள அணி. விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 125 பந்துகளில் இரட்டைச் சதமெடுத்து அசத்தினார். சஞ்சு சாம்சனுக்கு நல்ல இணையாக விளங்கினார் சச்சின் பேபி. அவர் 135 பந்துகளில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் எடுத்த இந்திய வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர்
சேவாக்
ரோஹித் சர்மா (3)
ஷிகர் தவன்
கர்ண் கெளஷல்
சஞ்சு சாம்சன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here