தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2ஆவது இந்திய அணி 601/5 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். இவர் 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய ரஹானே அரை சதம் கடந்தார், விராட் கோலி புனே டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் கண்டார் .

இது விராட் கோலியின் 7வது இரட்டைச் சதமாகும். தென் ஆப்பிரிக்க ஸ்பின்னர் முத்துசாமி வீசிய பந்தை ஸ்கொயர் லெக் திசையில் தட்டி விட்டு 2 ரன்கள் எடுத்த போது அவர் 200 ரன்களை எட்டினார். ஜடேஜா 91 ரன்களில் ஆட்டமிழக்க கோலி 254 ரன் எடுக்க இந்திய அணி 601/5 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here