பெல்ஜியம் கால்பந்து அணி கேப்டன் ஈடன் ஹசார்டு. அட்டக்கிங் மிட்பீல்டரான இவர் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். 208 போட்டிகளில் விளையாடி 69 கோல் அடித்துள்ளார். 27 வயதாகும் ஹசார்டு பெல்ஜியம் அணிக்காக 2008-ல் இருந்து விளையாடி வருகிறது. 92 ஆட்டங்களில் 25 கோல் அடித்துள்ளார்.

ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது யுவுான்டஸ் அணிக்கு டிரான்ஸ்பர் ஆகியுள்ளார். மேலும் சில வீரர்களை வெளியேற்ற ரியல் மாட்ரிட் முடிவு செய்துள்ளது.

இதனால் ஈடன் ஹசார்டை வாங்க ரியல் மாட்ரிட் விருப்பம் தெரிவித்தது. இதுகுறித்து செல்சியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது 170 மில்லியன் பவுண்டுக்கு (1527 கோடி ரூபாய்) வாங்க ரியல் மாட்ரிட் தயாராக இருப்பதாக தெரிவித்தது.

மேலும் வருடத்திற்கு 13 மில்லியன் பவுண்டு (117 கோடி ரூபாய்) சம்பளம் கொடுக்கவும் தயார் என்று கூறியது. இதனால் ஈடன் ஹசார்டு ரியல் மாட்ரிட் அணிக்கு மாறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here