இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்க இருந்தது. டாஸ் சுண்டப்படுவதற்கு முன் மழை பெய்தது. தொடர்ந்து மழைத்தூறல் இருந்து கொண்டே இருந்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை.

அதன்பின்னரும் மழைத்தூறல் விட்டுவிட்டு தூவிக் கொண்டிருந்ததால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

மேலும், இந்தியாவின் ஆடும் லெவன் அறிவிப்புகள் கொண்ட பேப்பர்கள் லீக் ஆகியுள்ளது.

இந்தியாவின் லீக்கான லெவன் : முரளிவிஜய், ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா , அஸ்வின், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here