நீதிமன்ற விசாரணை காரணமாக இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியுடனான மூன்றாவது போட்டியிலும் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 17ம் தேதி நாட்டிகாமில் துவங்க உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி;

அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ், ஜோ ரூட், ஓலி போப், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், சாம் கரான், அடில் ரஷீத், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், மொயீன் அலி, ஜேமி போர்டர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here