இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான முரளி விஜய் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்ற் பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புஜாரா சேர்க்கப்பட்டதால், இந்திய அணியின் துவக்க வீரர்களாக கே.எல் ராகுலும், முரளி விஜயும் களமிறங்கினர்.

வீடியோ;

https://twitter.com/Guptastats92/status/1027859756629864448

இதில் முதல் ஓவரை எதிர்கொண்ட முரளி விஜய், முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் ஸ்டெம்ப்பை பறிகொடுத்து பரிதாபமாக விக்கெட்டை இழந்தார்.

இதனையடுத்து வழக்கம் போல் இந்திய ரசிகர்கள் முரளி விஜயை விமர்சித்தும், கிண்டலடித்தும் வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here