இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரரான ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் கடுமையாக சொதப்பி வருகிறது, முதல் இன்னிங்ஸில் வெறும் 107 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரரான ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்டை கீப்பராக சேர்க்காவிட்டாலும், பின்வரிசை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்கலாம் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here